Home » தமிழ் » வெள்ளதடுப்புக்கு ஆஸ்த்ரியாவின் நடமாடும் வெள்ளசுவர்கள் - சென்னைக்கு பயன்படுமா?

வெள்ளதடுப்புக்கு ஆஸ்த்ரியாவின் நடமாடும் வெள்ளசுவர்கள் - சென்னைக்கு பயன்படுமா?

இயற்கை தன் சீற்றத்தை கட்டவிழ்த்து விடுகிற பொழுது - நம்மால் பாதுகாக்க முடிந்தவற்றை மட்டுமே வைத்து...

👤 Surya SG24 Nov 2016 7:44 AM GMT
வெள்ளதடுப்புக்கு ஆஸ்த்ரியாவின் நடமாடும் வெள்ளசுவர்கள் - சென்னைக்கு பயன்படுமா?
Share Post
  • whatsapp
  • Telegram
  • koo

இயற்கை தன் சீற்றத்தை கட்டவிழ்த்து விடுகிற பொழுது - நம்மால் பாதுகாக்க முடிந்தவற்றை மட்டுமே வைத்து நிறைவு கொள்ள முடியும். நடைபெறுகிற இயற்கை சீற்ற காட்சிகளின் சாட்சிகளாக இருப்பதையன்றி நம்மால் வேறெதுவும் பெரும்பாலான சமயங்களில் செய்ய இயலாது. குறிப்பாக வெள்ளத்தை போன்ற அபாயங்கள் ஏற்படுகிற பொழுது. ஆனாலும் கூட அசாத்தியமான பொறியியல் தொழில்நுட்பமொன்றை இயற்கை இடரிலிருந்து நம்மை மீட்பதற்கு ஏதுவாக பயன்படுத்தலாம் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் க்ரியின் நகரம் கடந்த சில ஆண்டுகளில் டான்பே ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. ஆஸ்திரியா நாட்டின் கரையோர பகுதிகளில் வாழ்கிற மக்கள் இவ்வெள்ளத்தின் நேரடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தீர்வாக தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தாலம் என்று முயன்றதன் பயனாய் அந்நாட்டு குடிமக்களின் பாதுகாப்பை முன்னிலை படுத்தி நடமாடும் வெள்ள தடுப்பு சுவர்கள் அல்லது கட்டமைக்கப்பட்டு மீண்டும் லாவகமாக பிரித்தெடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட சுவர்களை நிர்மாணித்துள்ளனர்.
இச்சுவரின் அற்புதமான சிறப்பம்சம் - நகரினில் வெள்ளம் பிரவேசிக்கவே முடியாது என்பதே. "Flood Resolution Co Ltd" என்கிற இங்கிலாந்து நாட்டை சார்ந்த நிறுவனம் வெள்ளதடுப்பிற்கென பிரத்யேக சுவர்களை கட்டமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இந்த முறையில் இரண்டு முக்கிய கட்டங்கள் உண்டு, ஒன்று நிரந்தரமாக கட்டமைக்கப்பட்ட திடமான அடித்தளம் மற்றொன்று அதன்மீது கட்டமைக்கவுள்ள பிரித்தெடுக்கும் வகையில் அமைந்த தற்காலிக சுவர்கள்.
"இந்த வெள்ளதடுப்பு முறை, பூமிக்கடியில் உள்ள அடித்தள சுவர்களை மையமாக கொண்டேயியங்குகிறது. வெள்ளத்தின் அளவை பொருத்து அவ்வப்போது அதிகரிக்கும் நிலத்தடி நீரிலிந்தும் பாதுகாக்கிறது. பூமிக்கடியிலிருக்கும் சுவர்களின் ஆழம் அடித்தள பாறைகளை பொருத்தே அமைகிறது. இதுவே வெளிப்புற சுவர்களின் உயரத்தையும் தீர்மானிக்கின்றன." என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடமாடும் வெள்ளசுவர்கள் அற்புத பொறியியலின் அடையாளமாய் திகழ்கிறது., "வெள்ளநீரை தடுத்து நிறுத்தும் இம்முறையின் கீழ் கட்டமைக்கப்படவுள்ள தடுப்பு சுவர்கள் மற்றும் இதர தொழில்நுட்பங்கள் நிர்மாணிக்கப்படும் முன் பூமிக்கடியிலுள்ள சுவர்கள் கற்கலவையினால் வலுவூட்டப்படும்." என அதுகுறித்து மேலும் பல தகவல்களை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் இல்லாத சமயத்தில் சுவரின் தோற்றம் பிரமிப்பூட்டும் வகையில் இருப்பது இதன் தனிச்சிறப்பு. மிகவும் உயரமான மற்றும் அதிசயக்கதக்க நடமாடும் வெள்ளதடுப்பு சுவர்களின் கட்டுமானம் டிசம்பர் 2010இல் க்ரியின் நகரில் முழுமையடைந்தது. அடித்தள சுவரின் உயரம் ஒரு மீட்டர் அதன் மேல் கட்டமைக்கப்பட்ட நடமாடும் வெள்ள தடுப்பு சுவரின் உயரம் 3.6 மீட்டர் என ஐபிஎஸ் டெக்னிக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெள்ளத்தின் அபாயம் உடனடியாக ஏற்படும் வேளையில் சுவரை உருவாக்க இரண்டு தூண்களுக்கும் நடுவே அமைக்கப்படும் தடுப்பு பலகைகள் காண்பதற்கு ஆச்சர்யமூட்டுபவைகளாக உள்ளன. இம்முறையின் மூலம், வெள்ளத்தின் அளவு 4.6 மீட்டர் ஆக உயரும் போது அதன் பின்புறம் இருக்கும் நிலங்கள் பாதுகாப்படுகின்றன. அதாவது இச்சுவருக்கு மறுபுறம் இருக்கும் உயர்ந்த கட்டிடங்களுக்கு சமமாக இந்த தடுப்புகள் உருவாக்கப்பட்டும் வெள்ள நீர் தடுக்கப்பட்டும் வருகிறது என அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
கட்டப்பட்டுள்ள ஆறு வெள்ளதடுப்பு சுவர் பிரிவுகளில் ஒன்று மெக்லாந்த் அணை திட்டத்தை உள்ளடக்கியது. இந்த அணையை மையப்படுத்தியே க்ரியின் நகரின் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மெக்லாந்த் அணையின் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 25, 2012 நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜூன் 2013 ஆம் ஆண்டு இந்த வெள்ள்த்தடுப்பு சுவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததன் பயனாய் பெரும் புகழை ஈட்டியது. அபயகாரமான வெள்ள நேரங்களில் இச்சுவர்கள் நகரை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதற்கான காணொளி இங்கே…
பலத்த சேதத்திலிருந்து மக்களை காக்கும் இம்முறையை மற்ற நாடுகளும் பின்பற்றலாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. இந்த தடுப்பு சுவர்களும் அசாத்திய பொறியியல் திறமையும் நமக்கு சொல்வது ஒன்றைதான் தொழில்நுட்பங்கள் நம் உயிரையும் காக்க வல்லது!!

Video Link -



SG சூர்யா, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

Tags