Home » தமிழ் » The Eye Tribe தொழில் நுட்பம்

The Eye Tribe தொழில் நுட்பம்

பத்து வருடங்களுக்கு முன்பு நம்முள் பலருக்கு 'கைபேசி' என்பது ஒரு வியப்பான பொருளாக இருந்தது. அதிலும்...

👤 பிரதீப் கு3 Nov 2016 6:38 AM GMT
The Eye Tribe தொழில் நுட்பம்
Share Post

பத்து வருடங்களுக்கு முன்பு நம்முள் பலருக்கு 'கைபேசி' என்பது ஒரு வியப்பான பொருளாக இருந்தது. அதிலும் 'வண்ண கைபேசி' அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடியதாக இருந்தது. யாரிடமாவது வண்ண கைபேசி இருந்தால் அதை பறித்து கை விரல்களால் விளையாடினால் மனதிற்கு அவ்வளவு திருப்தியாக இருக்கும். வண்ண கைபேசி, ரேடியோ, கேமரா, FM என்று பல பரிணாம வளர்ச்சியை 'கைபேசி' அடைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 'Touch Screen' கைபேசிகளை சந்தையில் வெளியிடும் போது உலகமே திரும்பி பார்த்தது. ஆப்பிளின் Steve Jobs-ஐ பலர் Semi-god status-ல் வைத்தனர். கூகுளின் Android, ஆப்பிளின் Iphone ஆகியவை உலகையே தன் வசப்படுத்தின. இன்னும் 'கைபேசி'யின் மீது இருக்கும் மோகம் குறைந்தபாடில்லை, குறையவும் குறையாது, காரணம் நாளுக்கு நாள் புதுமையான விசயங்கள் சந்தையில் அறிமுகமாவது, இந்த வரிசையில் இப்பொழுது புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது 'The Eye Tribe' என்ற நிறுவனம். கண்ணின் அசைவுகளால் கைபேசி மற்றும் கணினி போன்றவற்றை இயக்குவதே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம்.


இந்த தொழில்நுட்பம் Camera மற்றும் Infrared LED யின் துணையைக் கொண்டு இயங்குகிறது. கண் விழியின் ஒவ்வொரு துல்லியமான அசைவுகளையும் Camera படமாக்கும். 'Computer vision algorithm' மூலமாக எடுக்கப்பட்ட படங்களை வைத்து 'Onscreen gaze co-ordinates' அதாவது நாம் திரையின் எந்தப் பகுதியை பார்க்கிறோம் என்பதை துல்லியமாக கணித்துவிடும். நமது விரல் நுனியின் அளவை விட சிறிய அசைவுகளை கூட துல்லியமாகக் கணிக்கும் வல்லமை வாய்ந்தது. இதை வைத்து கைபேசியை எளிதாக இயக்கலாம், Page scrollஇல் இருந்து File transfer வரையில் எளிதில் செய்யலாம்.

'Eye Tribe' தொழில்நுட்பம் விளம்பரத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உதாரணமாக இணையத்தளத்தில் இருக்கும் விளம்பரங்களில் எதை அனைவரும் அதிகமாக காண்கின்றனர், எவ்வளவு நேரம் காண்கின்றனர், எது அனைவரையும் ஈர்க்கின்றது போன்ற விவரங்கள் எளிதில் கிடைக்கும். அதற்கு தகுந்தாற்போல் விளம்பரங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம்.
நமது வங்கி கணக்குகளுக்கு வைக்கப்படும் 'Password'-ற்கு பதிலாக, நமது கண்பார்வையை Login செய்வதற்கு உபயோகிக்கலாம். இது மிகவும் பாதுகாப்பான முறையாகும்.

இந்த தொழில்நுட்பத்தை டென்மார்க்கை சேர்ந்த IT PHD மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். $3.3 Million டாலர்கள் ஆராய்ச்சிக்காக திரட்டியுள்ளனர். முழு வடிவம் அடைந்தபின் அனைத்து Smartphone - களிலும் இந்த தொழில்நுட்பத்தை பார்க்கலாம். இதன் தொழிநுட்ப விவரங்கள்:

Accuracy 0.5° (average)
Spatial resolution 0.1° (RMS)
Latency < 20 ms at 60 Hz
Calibration 5, 9, 12 points
Operating range 45 cm – 75 cm
Tracking area 40 cm × 30 cm at 65 cm distance
Screen sizes Up to 24 inches

Mouse , Keyboard என்ற காலம் போய், நமது உணர்வுகள் மற்றும் அசைவுகளினால் இயக்கப்படும் கருவிகள் வரும் நாட்கள் வெகுதூரம் இல்லை. இன்னும் சிலநாட்களில், நமது பசியைக் கூட துல்லியமாக கண்டுபிடித்து, நமக்கு விருப்பமான உணவை 'Order' செய்து , நாம் இருக்கும் இடத்திற்கு உணவை கொண்டுவந்து சேர்க்கும் APP வந்தால் கூட ஆச்சர்யமில்லை. நமது 'Gadgets' உடன் சிரித்து பேசும் நாளும் வர வாய்ப்புள்ளது. உண்மையான உறவுகளுக்காக செலவிடும் நேரத்தை குறைக்காமல் இருந்தால் ஆரோக்கியம்!

பிரதீப் கு

Tags