Home » தமிழ் » தலையங்கம்: தமிழக சட்டமன்ற தேர்தல் களம்

தலையங்கம்: தமிழக சட்டமன்ற தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம், வேகமாக சூடேற தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, பாரதீய ஜனதா, பாட்டாளி...

👤 பிரதீப் கு15 March 2016 6:05 AM GMT
தலையங்கம்: தமிழக சட்டமன்ற தேர்தல் களம்
Share Post
  • whatsapp
  • Telegram
  • koo

தமிழக சட்டமன்ற தேர்தல் களம், வேகமாக சூடேற தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, விஜயகாந்த்-மக்கள் நல கூட்டணி ஆகிய 5 அணிகள் களத்தில் இருக்கின்றன. இவர்களை தவிர, சீமானின் "நாம் தமிழர்" கட்சியும் களத்தில் தனியாக போட்டியிடுகிறது. இந்த தேர்தலில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதைச்செய்வோம் அதைச் செய்வோம்" என்ற வாக்குறுதிகள், அரசியல் மேடைகளில் பறக்கும். இதன் உண்மையான நோக்கம், ஏழை வாக்காளரின் கையில் இருக்கும் வாக்கு சீட்டை பறிப்பதுதான்.

எப்படித்தான், ஒரு வாக்காளர் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலும், அந்த வாக்காளரை, எப்படியாவது ஏதாவது ஒரு கட்சி, ஏதாவது ஒரு "ஆயுதத்தால்" வீழ்த்தி விடும். இந்த நிலைதான், இன்று தமிழகத்தில் இருக்கிறது. அந்த குறிப்பிட்ட ஆயுதம், கட்சி ரீதியாக இருப்பதில் தவறு இல்லை.

ஆனால், அந்த ஆயுதம், மதமாகவும், சாதியாகவும் இருப்பது தவறு. ஆனால், அந்த ஆயுதங்களும், வாக்காளர்கள் மத்தியில் புகுந்து விடுகிறது, என்பதே உண்மை. அதனைத்தவிர, பணம் என்ற மிகப்பெரிய ஆயுதமும் பாய்ந்து விடுகிறது. இதனால், கொள்கைகள் கூட காற்றில் பறந்து விடுகிறது. இது போன்ற நிலை மாறுமா? அல்லது மாற்ற முடியுமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினால், தானாக மாறாது., மாற்றப்பட வேண்டும். அது வாக்காளர்கள் கையில்தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட அரசியல் சூழலில், வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தப்படுவோரில் சிலர், குற்றத்தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்களையும், வாக்காளர்கள்தான் அடையாளம் கண்டு, எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். அதனையும் மீறி, தவறான வேட்பாளர் தேர்ந்து எடுக்கப்பட்டுவிட்டால், அது அந்த தொகுதிக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே சாபக்கேடு…!!!.

பிரதீப் கு


Tags