சென்னை ஐ.ஐ.டி வளாக விழாவில் M.P-க்களுக்கு சன்சத் ரத்னா விருதுகள் - #SansadRatna2016
சென்னை ஐ.ஐ.டியில் சென்ற ஜூன் மாதம் 11-ந் தேதி சிறந்த பார்லியமெண்டரியேன்களாக...
சென்னை ஐ.ஐ.டியில் சென்ற ஜூன் மாதம் 11-ந் தேதி சிறந்த பார்லியமெண்டரியேன்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.பி-க்களுக்கு #SansadRatna2016 விருதுகள் வழங்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வாறு பாராளுமன்றத்தை பயனுள்ள வகையில் மக்களின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அங்குள்ள பதிவேடுகளை ஆதாரமாகக்கொண்டு சூப்பர் எம்.பி-க்கள் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பாக அதிக நாட்கள் சபையில் ஆஜர் ஆனவர்கள், மக்கள் நலனுக்காக அதிக கேள்விகள் எழுப்பியவர்கள், அதிக விவாதங்களில் கலந்துகொண்டவர்கள், கமிட்டி கூட்டத்தில் தவறாது பங்கேற்றவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களை தேர்ந்தெடுத்து இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டும் கட்சி பாகுபாடு இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2016-ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுககான வழங்கப்படும் #SansadRatna2016 விருதுகளை சென்னையை சேர்ந்த Prime Point Foundation அமைப்பு சார்பில் வழங்கினர். சிவசேனா எம்.பி திரு.சிவாஜி அதல்ராவ் படேல், ராஜஸ்தானை சேர்ந்த பி.பி.சவுத்ரி, மராட்டிய மாநிலத்தை சேர்நத மற்றொரு சிவசேனா எம்.பி-யான ஸ்ரீரங் அப்பா பார்னே, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க இளம்பெண் எம்.பி Dr.ஹீனா விஜயகுமார் காவிட், மராட்டிய காங்கிரஸ் எம்.பியான திரு.ராஜீவ் சங்கர்ராவ் சதவ், கேரள மாநிலம் சி.பி.எம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் திரு.பி.ராஜீவ் ஆகியோருக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர் சி.ரங்கராஜன் தலைமையில் விருது வழங்கப்பட்டது. அரசியல் மற்றும் மக்களாட்சி தத்துவம் குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.
முன்னதாக அனைவரையும் பிரைம் பாய்ண்ட் சீனிவாசன் அவர்கள் வரவேற்றார். விருது பெற்ற எம்பிக்கள் தாங்கள் பணியாற்றும் விதம் குறித்து ஆர்வத்துடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். 28 வயதே ஆன மராட்டிய பா.ஜ.க வை சேர்ந்த இளம் பெண் எம்.பி டாக்டர் ஹீனா விஜயகுமார் பேசுகையில் ''பாராளுமன்றத்தில் முக்கிய விவாதத்தில் பங்கேற்று பேசும்போது தான் எழுதவிருந்த உயர்கல்விக்கான தேர்வு எழுதும் நாளைக் கூட தான் மறந்து விட்டதாகவும், அந்த அளவுக்கு மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியம் அளித்து தான் பணியாற்றி வருவதாக'' குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது பிரைம் பாயிண்ட் சீனிவாசன் அவர்களால் படைக்கப்பட்ட PreSense 100+ என்ற நூல் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டாக்டர்.சி. ரங்கராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. நூல் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களுக்குNext Page