தள்ளாட்டத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை ?
ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று , முதல்வராக பதவியேற்றவுடன் ஜூன் 14 ஆம் தேதி பிரதமரை சந்தித்து...
ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று , முதல்வராக பதவியேற்றவுடன் ஜூன் 14 ஆம் தேதி பிரதமரை சந்தித்து பேசினார். 29 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை பிரதமரிடம் கொடுத்தார். அதில் முக்கியமானது அடுத்த நான்கு வருடங்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு நிதியாக 2000 கோடி தரவேண்டும் என்பதே!
2016-2017 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. இதனுடன் சேர்த்து 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தினால் செலவாகும் 17,000 கோடி ரூபாய் மற்றும் தேர்தல் நேரத்தில் அறிவித்த இலவசங்களுக்கான 11000 கோடி ரூபாய் ஆகியவற்றை கூட்டினால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 32000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். ஆதலால் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்திற்கு கூட மற்ற நிதி நிறுவனங்களிடமோ, மத்திய அரசிடமோ கை ஏந்த வேண்டியிருக்கும்
2016-2017 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டின் நிதி பற்றாக்குறை 30,000 கோடியையும் சேர்த்தால் 62,000 கோடி ரூபாய் அளவு நிதி நெருக்கடி ஏற்படும், இதை கருத்தில் கொண்டுதான் 80,000 கோடி ரூபாய் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழகத்திற்கு இலவசங்கள் தேவையா
பிரதீப் கு